உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் தராததால் தம்பதியைத் தாக்கியவர் கைது

பெண் தராததால் தம்பதியைத் தாக்கியவர் கைது

விழுப்புரம்; விழுப்புரத்தில் திருமணத்திற்கு பெண் கேட்டு தராததால், பெண்ணின் பெற்றோரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தர், 36; இவர், 20 வயது பெண்ணை, ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படி கடந்த 5ம் தேதி, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.பெண்ணின் பெற்றோர் மறுத்ததால், ஆத்திரமடைந்த ஷேக்அக்தர், அந்த பெண்ணின் தாய், தந்தையை தாக்கி, மிரட்டல் விடுத்தார்.இதில், காயமடைந்த இருவரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, ஷேக் அக்தரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ