மயிலத்தில் தீர்த்தவாரி உற்சவம்
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மயிலம் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வழக்கமான அபிஷேக வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அக்னி தீர்த்த குளத்தில் சுவாமிக்கு மகா தீர்த்தவாரி நடந்தது.பிற்பகல் 12:00 மணிக்கு நடந்த மகா தீபாரதனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.