உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வியாபாரி வீட்டில் திருட்டு

வியாபாரி வீட்டில் திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.விழுப்புரம், சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி,44; இவர், கோலிசோடா பாட்டில்களை மொத்தமாக வாங்கி, விழுப்புரம் நகரில் உள்ள கடைகளுக்கு சில்லரை விலைக்கு விற்பனை செய்கிறார். நேற்று முன்தினம் இவர், தனது வீட்டை பூட்டாமல் கதவை மட்டும் மூடிவிட்டு, கோலிசோடாவை கடைகளுக்கு சப்ளை செய்ய சென்றுள்ளார். பின், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை