உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அம்மன் கோவிலில் திருட்டு; போலீஸ் விசாரணை

அம்மன் கோவிலில் திருட்டு; போலீஸ் விசாரணை

விழுப்புரம், : விழுப்புரத்தில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரவி, 51; பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவில் பூசாரி.இவர், நேற்று காலை 6:00 மணிக்கு கோவிலை திறந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை மற்றும் அம்மன் கழுத்திலிருந்த தாலியில் போட்டி யிருந்த பொட்டு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.மேலும், கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை உடைத்து, அதில் பதிவாகியிருந்த ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்றுள்ளனர்.விழுப்புரம் மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். பின், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ