உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மயிலம் : சிங்கனுாரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.மயிலம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 69; உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர், நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, மனைவி திலகாவுடன் மருத்துவமனைக்கு சென்றார். மாலை 4:00 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. தகவல் அறிந்த மயிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ