உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.60 ஆயிரம் திருட்டு:

ரூ.60 ஆயிரம் திருட்டு:

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 54; விவசாயி. இவர், 2 சவரன் நகையை விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து 60 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். அந்த பணத்தை தனது மொபட் சீட் அடியில் வைத்து மாம்பழபட்டு சாலையில் ஒரு பர்னிச்சர் கடைக்கு சென்றார். பின், திரும்பி வந்து சீட்டை திறந்து பார்த்தபோது பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி