உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி பேட்டரிகள் திருட்டு

லாரி பேட்டரிகள் திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் லாரி பேட்டரிகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த உலகலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 44; இவர், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தில், கடந்த 3 மாதமாக ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரின் லாரியில், நேற்று முன்தினம் மர்ம நபர், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 பேட்டரிகள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நாகப்பன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பேட்டரிகளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி