உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்று டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு

இன்று டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கொள்குறி வகை தேர்வு நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் கொள்குறி வகை தேர்வு இன்று காலை 9:30 மணி முதல் பகல் 12:30 வரை நடக்கிறது. விண்ணப்பதாரர்கள், காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு ஹால்டிக்கெட்டோடு வரவேண்டும். 9:00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பகல் 12:30க்கு முன், தேர்வறையில் இருந்து வெளியேற அனுமதி இல்லை. ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும். தேர்வு மையங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ் வசதி, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும், இன்று காலை 6:00 மணி முதல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை