உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வானுார்: தொடர் விடுமுறையையொட்டி, சர்வதேச நகரமான ஆரோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆரோவில் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அமைதி பூங்காவாக உருவாக்கப்பட்ட ஆரோவில்லில், உருண்டை வடிவிலான மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த, 25ம் தேதி கிறிஸ்துமஸ், வெள்ளிக்கிழமை மற்றும் சனி மற்றும் இன்று 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி, புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், கடந்த 3 தினங்களாக ஆரோவில் பகுதிக்கு படையெடுத்தனர். விசிட்டர் சென்டர் பகுதியில் அனுமதி சீட்டு பெற்ற அவர்கள், நடை பயணமாக சென்று உருண்டை வடிவிலான மாத்திர் மந்திரியை, 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டனர். கிறிஸ்துமஸ் விழா அன்று 7,215 பேரும், நேற்று முன்தினம் 9,574 பேரும் பார்வையிட்டுள்ளனர். நேற்று மட்டும் 9000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ஆரோவில் நிர்வாகம் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அதிகரித்ததால், இடையஞ்சாவடியில் இருந்து கோட்டக்கரை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி