உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம், ; விழுப்புரத்தில் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் கே.கே., ரோடு பகுதியில் வணிக நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மற்றும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சாலாமேடு, தளவானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன. இச்சாலையில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதாலும், நடைபாதை கடைகளாலும் இந்த நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !