மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
02-Nov-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பயிற்சியின் போது கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீரென ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்போது செய்ய வேண்டிய முக்கிய செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக பாதுகாப்பு நல தனி தாசில்தார் வேல்முருகன், தேர்தல் தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ்,தேர்தல் உதவியாளர் உஷா, தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர்.
02-Nov-2025