மேலும் செய்திகள்
ரங்கபாளையத்தில் 1,150 மரக்கன்று நடவு
06-Nov-2025
செஞ்சி: கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் மரம் நடும் விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரிக்கு வனத்துறை மூலம் 3,000 மரக்கன்றுகளை வழங்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நேற்று நடந்து. கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வனத்துறை அலுவலர்கள் ஜெயபால், ராதா, ராதா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். பி.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பேராசிரியர்கள் மாலதி, கோசலை, சுகந்தி, பிரதிபா, சுந்தரி பங்கேற்றனர்.
06-Nov-2025