உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

விழுப்புரம் :கல்லறை தினத்தையொட்டி, விழுப்புரத்தில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் இறந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.கிறிஸ்தவர்கள், இறந்தவர்களை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கின்றனர். இந்த நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது.நேற்று நடந்த கல்லறை தினத்தையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் கல்லறை தோட்டத்தில் காலை 6:00 மணிக்கு திரளான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி ஜெபம் செய்தனர்.இதேபோன்று, விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை, முண்டியம்பாக்கம், பனையபுரம், வீடூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் கல்லறை திருவிழா நடந்தது.திண்டிவனத்தில் காலேஜ் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., கல்லறைத் தோட்டத்திலும் கல்லறை திருநாள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி