பா.ஜ., பிரமுகர் தாய் இறப்புக்கு அஞ்சலி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே தென்கோடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளிரகுராமன். பா.ஜ.,மாநில செயலாளராக உள்ளார். இவரது தாயான, முன்னாள் ஊராட்சி தலைவர் பங்கஜம் அம்மாள் நேற்று முன்தினம் உடல் நலமின்றி இறந்தார். அவரது உடலுக்கு, பா.ஜ.,மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாவட்ட தலைவர் விநாயகம் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, வைத்திலிங்கம் எம்.பி., வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, ஜானகிராமன், டாக்டர்கள் சேகர், பரசுராமன், புதுச்சேரி எம்.எல்.ஏ., சிவசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, ரெட்டியார் சங்க நிர்வாகிகள் ரவிரெட்டியார், ஆர்யாஸ் ஓட்டல் ராமகிருஷ்ணன், ரமணன் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.