உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ., சையது முகமது, நாராயணன் முன்னிலை வகித்தனர். மேலாளர் கலைவாணி வரவேற்று தீர்மானங்களை படித்தார். கூட்டத்தில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 30 இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள், கலைஞர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டி பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொறியாளர்கள் குமரன், நடராஜன், முருகன், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் பாபு, வசந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை