உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் வகுப்பு: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் வகுப்பு: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தொகுதியில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட மேல்காரணை, கஞ்சனுார் பள்ளி வகுப்புகளை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விக்கிரவாண்டி தொகுதியில் மேல்காரணை, கஞ்சனுார் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக அரசு தரம் உயர்த்தியது. இதையடுத்து 2 பள்ளிகளில் நடந்த வகுப்புகள் துவக்க விழாவிற்கு எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவர்களுக்கு பொதுதேர்வுக்கான கையேடுகளை வழங்கி பேசினார். சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ., சேகர் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, திட்டக்குழு தலைவர் முருகன், வேளாண்மை குழு தலைவர் முருகன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், தலைமை ஆசிரியர்கள் எட்வின் ஜோசப், முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ