உள்ளூர் செய்திகள்

உறியடி திருவிழா

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து நடந்த உறியடி திருவிழாவை விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் துவக்கி வைத்தார். பின் சுவாமி மாடவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உறியடி நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்ற னர். விழா ஏற்பாடுகளை யாதவா மகா சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ