உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கோதண்டராமர் கோவிலில் வைணவ மாநாடு

 கோதண்டராமர் கோவிலில் வைணவ மாநாடு

செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை கோதண்டராமர் கோவில் ஸ்ரீ மதுரகவி யாழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபை சார்பில் கார்த்திகை மாத வைணவ மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் சபை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மதுரகவி திருமால் துதி பாடினார். குமார் வரவேற்றார். நொளம்பூர் ராமதாஸ் அமலனாதிபிரான் வைபவம் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சபை நிறுவனர் டாக்டர் ரமேஷ்பாபு, செயலாளர் பாலு, விழா குழுவினர் அர்ச்சனா ரங்கநாதன், தீனதயாளன், சுந்தர் மற்றும் பலர் பங்கேற்றனர். செஞ்சி பகுதியைச் சேர்ந்த பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் திரளாக பங்கேற்றனர். வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை