மாவட்டத்தில் அதிகளவாக வளவனுாரில் 81 மி.மீ., மழை பதிவு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை வரை பலத்த மழை பெய்ததில், அதிகபட்சமாக வளவனூரில் 81 மி.மீ., மழை பதிவானது.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் மாலை 3:00 மணி முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து அதிகாலை வரை மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மழையின்றி வழக்கமான வெயில் சூழல் நிலவியது.மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு: விழுப்புரம் 60 மி.மீ, கோலியனுார் 76, வளவனுார் 81, கெடார் 14, முண்டியம்பாக்கம் 28, நேமூர் 15, கஞ்சனுார் 10, சூரப்பட்டு 18, வானுார் 13, திண்டிவனம் 20, மரக்காணம் 11, செஞ்சி 11, செம்மேடு 7, வல்லம் 6, அனந்தபுரம் 14, அவலூர்பேட்டை 5, வளத்தி 9, மணம்பூண்டி 7, முகையூர் 7, அரசூர் 19, திருவெண்ணெய்நல்லுார் 18மி.மீ., என மொத்தம் 450 மி.மீ, சராசரியாக 22 மி.மீ., மழை பதிவானது.தொடர் மழையில், நேற்று முன்தினம் 3 வீடுகளின் கூரைகள் விழுந்து பாதித்த நிலையில், நேற்றும், விழுப்புரம்கீழ்ப்பெரும்பாக்கம் சண்முகபெருமான்கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது கூரை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டது.