உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில அளவில் ரீல்ஸ் போட்டி வானூர் அரசு கல்லூரி முதலிடம் 

மாநில அளவில் ரீல்ஸ் போட்டி வானூர் அரசு கல்லூரி முதலிடம் 

வானூர்: மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரீல்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவர்களை வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் பாராட்டியது. தமிழ்நாடு அரசு செய்தி, மக்கள் தொடர்புத்துறை, ஊடக மையம் சார்பில், 'லவ்டின்-2025' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவில் ரீல்ஸ் போட்டி, புகைப்பட போட்டி, வினாடி - வினா, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. தமிழகத்தில் உள்ள ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் சகமாணவர் கோகுல் தலைமையில் ரீல்ஸ் போட்டியில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில், செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவரவித்தார். ரீல்ஸ் போட்டியில் மாநில அளவில் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களை வானூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் வில்லியம், வணிகவியல் துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை