தனி ஊதியம் வழங்க வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை
விழுப்புரம் : விழுப்புரத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் வள்ளல்பாரி தலைமை தாங்கினார். மகளிரணி மாவட்ட செயலாளர் ராஜகுமாரி வரவேற்றார். மாநில தலைவர் பூபதி, பொதுச்செயலாளர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றினர். மாநில சங்க புதிய நிர்வாகிகளுக்கு விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலுார், தர்மபுரி, தஞ்சாவூர், மதுரை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.கிராம நிர்வாக அலுவலர்கள் 30 சதவீத பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். தனி ஊதியம், பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.