உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம், : அரசு விதியை பின்பற்றாமல் பணியிட மாறுதல் செய்ததாக, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று காலை 11:30 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு, சங்கத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் புஷ்பகாந்தன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் விஸ்வநாதன் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், மணிபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழுப்புரம் அடுத்த கல்பட்டு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றிய பார்த்தசாரதியை இடையூறு பணிமாறுதல் செய்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டதை கண்டித்தும், மேலும், 4 வி.ஏ.ஓ.,க்களுக்கு அரசு விதிமுறையை பின்பற்றாமல் பணியிட மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்தும், தவறான பணியிட மாறுதல் ஆணையை உடனே ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர்.போராட்டக்காரர்களிடம் ஆர்.டி.ஒ., காஜா ஷாகுல்அமீது பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படாததால் நிர்வாகிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஆர்.டி.ஓ., கூறுகையில், 'இது தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் உத்தரவின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் தொடர்ந்தால் அதில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ