உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 3வது நாளாக சென்னைக்கு திரும்பிய வாகனங்கள்

3வது நாளாக சென்னைக்கு திரும்பிய வாகனங்கள்

விக்கிரவாண்டி: தீபாவளி பண்டிகை முடிந்து மூன்றாவது நாளாக சென்னை தலைநகருக்கு வாகனங்கள் திரும்பின. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடந்து சென்றன. பண்டிகை முடிந்து கடந்த, 21ம் தேதி மற்றும் நேற்று என இரு நாட்களில், 54,400 வாகனங்கள் சென்னைக்கு சென்றன. விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வழியாகவும், ஜானகிபுரத்தில் இருந்து புதுச்சேரி இ.சி.ஆர்., வழியாகவும் உளுந்துார்பேட்டை-திருக்கோவிலுார் திருவண்ணாமலை வழியாகவும் இலகு ரக வாகனங்கள் பிரித்து அனுப்பியதால் அவ்வழியே பெரும்பாலான வாகனங்கள் சென்னைக்கு சென்றன. தமிழகத்தில் தற்பொழுது பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதால் ஒரு சிலர் நேற்று சென்னைக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று சராசரியான போக்குவரத்து காலை முதல் காணப்பட்டது. மாலை 6:30 மணி வரை 30 ஆயிரம் வாகனங்கள், 6 லேன்களில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடந்து சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்