உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பல்லாங்குழியான சாலை கிராம மக்கள் கடும் அவதி

 பல்லாங்குழியான சாலை கிராம மக்கள் கடும் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ப.வில்லியனுார் கிராம சாலை பல்லாங்குழி பள்ளங்களுடன் சேதமாகி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுார் கிராமத்துக்கான தார்ச்சாலை, 3 கி.மீ., தொலைவிற்கு சேதமடைந்துள்ளது. கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து ஊருக்கு செல்லும் இந்த கிராமச் சாலை ப.வில்லியனுார், தாதாம்பாளையம், புதுப்பாளையம் கிராமங்களின் வழியாக செல்கிறது. இக்கிராமத்தில் 1,500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், தினசரி வேலை, பள்ளி, கல்லுாரிகளுக்கு விழுப்புரம், கோலியனுார் நகர பகுதிக்கு செல்வதற்கு, நீண்டதுாரம் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த கிராம சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மழையின் காரணமாக பல இடங்களில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழிபோல் சாலை உள்ளதால், மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி அவதிப்பட்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். பொதுமக்களின் அத்தியவசிய தேவையை கருத்தில்கொண்டு, உடனடியாக இச்சாலையை புதுப்பித்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ