விழுப்புரம்--மதுரை- ராமேஸ்வரம் வாரம் 4 நாட்கள் சிறப்பு ரயில் செகந்திராபாத் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
சிவகங்கை:பாம்பன் பாலம் பணிகள் முடிந்ததால் ராமநாதபுரம் வரை இயக்கப்பட்டு வந்த அனைத்து ரயில்களும், ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. கூடுதலாகவும் புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி விழுப்புரம் - மதுரை - ராமேஸ்வரம் இடையே மே 2 முதல் ஜூன் 30 ம் தேதி வரை கோடை கால சிறப்புயில் இயக்கப்பட உள்ளது. திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி தோறும் அதிகாலை 4:15 மணிக்கு விழுப்புரத்தில் (வண்டி எண்: 06105) புறப்படும் இந்த ரயில் விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இதே நாட்களில் ராமேஸ்வரத்தில் (வண்டி எண்: 06106) மதியம் 2:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே வழித்தடத்தில் சென்று இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும்.ஒரு ஏ.சி., மூன்றடுக்கு பெட்டி, 13 சேர் கார் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பெட்டிகளுடன் இயக்கப்படும். முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயிலும் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதனன்று இரவு 9:10 மணிக்கு செகந்திராபாத்தில் (வண்டி எண்: 07695) புறப்படும் ரயில் வியாழன் இரவு 10:28 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். அங்கிருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு வெள்ளி அதிகாலை 12:15 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.வெள்ளியன்று காலை 9:10 மணிக்கு ராமேஸ்வரத்தில் (வண்டி எண்: 07696) புறப்படும் இந்த ரயில் காலை 10:03 மணிக்கு ராமநாதபுரம் வந்து சனி அன்று மதியம் 12:50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.