உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் டி.ஐ.ஜி., எஸ்.பி., பணியிட மாற்றம்

விழுப்புரம் டி.ஐ.ஜி., எஸ்.பி., பணியிட மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.விழுப்புரம் சரக டி.ஐ. ஜி.,யாக ஜியாவூல்ஹக் பணிபுரிந்தார். இவர், தஞ்சை சரக டி.ஜ.ஜி.,யாக நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, சென்னை, தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்த திஷாமிட்டல், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி., மாற்றம்

அதேபோல், விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய், சென்னை, சி.ஐ.டி., கியூ பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளார். சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆணையராக பணிபுரிந்த தீபக்சிவாஜ் விழுப்புரம் எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி