உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

தியாகதுருகம் : விவசாய கிணற்றில் குளித்தபோது முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.தியாகதுருகம் அடுத்த பழைய சிறுவங்கூரை சேர்ந்தவர் மாணிக்கம், 64. இவர் கடந்த 25ம் தேதி மாலை ஊரை ஒட்டியுள்ள கந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றிருந்தார். அப்போது தவறி விழுந்து கிணற்றில் மூழ்கி இறந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனர். நேற்று முன்தினம் காலை கிணற்றில் மாணிக்கத்தின் பிரேதம் மிதந்தது.இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, மாணிக்கத்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ