உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கட்டு கற்கள் கடத்தி சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி தாசில்தார் வைகுண்டவரதன் மற்றும் வருவாய் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். உலகங்காத்தான் கைகாட்டி அருகே சென்ற டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பொற்படாக்குறிச்சியிலிருந்து அனுமதியின்றி கட்டு கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்ததால், அந்த டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை