உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திண்டிவனம் : வி.சி.டி.எஸ்., நிறுவனத்தின் தண்ணீர் வலைபின்னல் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி நடத்துவது குறித்து தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. திண்டிவனம் வெள்ளகுளம் கிராமத்தில் உள்ள வி.சி.டி.எஸ்., நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் சுற்றுச் சூழல் மன்றத்துடன் இணைந்து பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கரசானூரில் உள்ள வி.சி. டி.எஸ்., கல்வி மையத்தில் நடந்தது. வி.சி.டி.எஸ்., நிறுவன இயக்குனர் வழக்கறிஞர் மார்ட்டின் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்றார். ஓய்வுபெற்ற தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக முதல்வர் முனைவர் ராஜிக்கண்ணு, மாணவர் சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசு, சட்ட ஆலோசகர் ராஜாராமன், பவ்டா கல்லூரி ஆங்கில பேராசிரியர் மரியதாஸ், திண்டிவனம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பெரியநாயகம், ஆசிரியர் சின்னப்பன் பேசினர். வி.சி.டி.எஸ்., நிறுவன செயலாளர் கவுசல்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை