சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த விழுப்புரம் மாவட்ட வீரர்கள் கவுரவிப்பு
விழுப்புரம்; விழுப்புரத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடந்த விழாவில் சர்வதேச போட்டிகளில் சாதித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களை துணை முதல்வர் கவுரவித்தார்.விழுப்புரத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, 688 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அந்த விழாவில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற சங்கீதா, தீபக் ஆகியோர் துணை முதல்வரின் அருகே அமர வைத்து கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.விழுப்புரத்தைச் சேர்ந்த அந்த மாணவர் பரத்ஸ்ரீதர், சர்வதேச இளையோர் தடகள போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று 11 தங்க பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும், 2 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.விழுப்புரத்தைச் சேர்ந்த அந்த மாணவி சங்கீதா, மல்லர் கம்பம் விளையாட்டில் தமிழகம் சார்பில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். தமிழக அரசு மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன், இந்த சாதனைகள் படைத்ததாக அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.