உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் மழை 3 மணி நேரத்தில் 10 மி.மீ., பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை 3 மணி நேரத்தில் 10 மி.மீ., பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த திடீர் மழையால், விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் முழுதும், கோடை போல் பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. 10:30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதே போல், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வானுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார் என மாவட்டம் முழுவதும், நேற்று காலை தொடங்கி மதியம் 2:30 மணி வரை, விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது.கடும் வெயிலுக்கு இடையே, பலத்த மழை பெய்ததால், குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்களும், கோடை உழவுக்கு தேவையான திடீர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.மாவட்டத்தில், நேற்று காலை 6:00 முதல் 9:00 மணி வரை பதிவான மழை அளவு மி.மீ., விபரம்: விழுப்புரம் 10, கஞ்சனுார் 19, முண்டியம்பாக்கம் 12, வானுார் 30, திண்டிவனம் 10.8, வல்லம் 33, வளவனுார் 22, கோலியனுார் 24, என மாவட்டத்தில் மொத்தம் 210 மி.மீ., சராசரி 10.00 மி.மீ. மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !