உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் பழுது போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் பழுது போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் பழுது போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் பழுது போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

விழுப்புரம் : விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் பழுது நீக்கும் பணிகள் நடைபெறுவதால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் சீரமைப்பு பணியை முடிக்க 'நகாய்' தரப்பில் திட்டமிட்டுள்ளனர்.விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் மேம்பாலம், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்தது. பாலத்தின் பல இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள், பள்ளத்தில் சிக்கி, தடுமாறியபடி சென்றன. இதனால், கடந்த 21ம் தேதி இரவு முதல், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மேம்பால பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகனங்கள், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களுக்கான ஒரு வழி பாதையில் திருப்பி விடப்பட்டன. இதற்காக அந்த சாலையில் தடுப்பு ஏற்படுத்தினர்.மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியை பொக்லைன் மூலம் உடைத்து, சேதமடைந்த சிமென்ட் சாலை அகற்றப்பட்டது. இரவு பகலாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த இரு தினங்களில், சிமென்ட் கலவை மூலம் சாலையை செப்பனிடப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் மேம்பால சீரமைப்பு பணிகளை முடிக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, பொதுமக்கள் ஏராளமானோர், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர். விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், திருச்சி மார்க்கமாக சென்ற பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.ஜானகிபுரம் மேம்பாலத்தில், சீரமைப்பு பணியை விரைந்து முடித்து, வாகன நெரிசலை தவிர்க்க, நகாய் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை