உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மாட்டு பொங்கலில் பசு மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது.விழுப்புரம் அருகே சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்,43; விவசாயி. இவரது பசு மாட்டை நேற்று சவுக்கு தோப்பில் மேய்ச்சலுக்கு விட்டு வந்தார்.மாலை 6:00 மணிக்கு மாட்டு பொங்கல் விழா கொண்டாடுவதற்காக மாட்டை அழைத்துவர சென்றார்.சவுக்கு தோப்பில் பசுமாடு இறந்து கிடந்ததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு கீழே அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை பசு மாடு மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ