உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் ஆதினம் ஸித்தியடைந்தார்

மயிலம் ஆதினம் ஸித்தியடைந்தார்

மயிலம் : மயிலம் ஆதினம் 19ம் பட்ட சுவாமிகள் நேற்று முன்தினம் ஸித்தியடைந்தார்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபர ஆதினம் 19ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள்,86 நேற்று முன்தினம் இரவு ஸித்தியடைந்தார். இவர் மயிலம் முருகன் கோவில் திருமடம் சார்பில் நடத்தும் கல்லூரிகளை நிர்வாகம் செய்து வந்தார்.இவர் ஸித்தியடைந்ததை முன்னிட்டு சமாதி பூஜைகள் மகன்கள் குமாரசிவ ராஜேந்திரன், சிவகுமார், விஸ்வநாதன் முன்னிலையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொம்மையார்பாளையம் பெரிய மடத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு நடந்தது. புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மயிலம், பொம்மையார் பாளையம் உட்பட பல ஊர்களிலிருந்து பலர் மரியாதை செலுத்தினர். மயிலத்தில் கடைகள் மூடப்பட்டு சமாதி பூஜையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி