உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகைகளை பாலீஷ் போடுவதாக கூறி மோசடி செய்த பீகார் கும்பல் சிக்கியது

நகைகளை பாலீஷ் போடுவதாக கூறி மோசடி செய்த பீகார் கும்பல் சிக்கியது

செஞ்சி : மேல்மலையனூரில் பாலீஷ் போடுவதாக கூறி நகைகளை மோசடி செய்த பீகார் வாலிபர்கள் 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேல்மலையனூரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி வீரம்மாள்,25. கடந்த 15ம் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு வாலிபர்கள் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி தாலி செயினை அபேஸ் செய்தனர். இந்த குற்றவாளிகளை பிடிக்க செஞ்சி இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மணவாளன், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்ஹிந்த் தேவி, லோகநாதன், சேகர், குமார் அடங்கிய தனிப்படை அமைத்திருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் செஞ்சியை அடுத்த நீலம்பூண்டியில் ரோந்து சென்றனர். அங்கிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப்ஷா,26, கபில் ஷா,38, பிப்பின் குமார்,30, சிக்கந்தர் குமார்,28 ஆகிய நான்கு பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இவர்கள் மேல்மலையனூரில் வீரம்மாளிடம் நகையை அபகரித்ததை ஒப்புக்கொண்டனர். இவர் களை கைது செய்த போலீசார் செஞ்சி மாஜிஸ்ட்ரேட் ரேவதி முன்பு ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ