| ADDED : ஆக 02, 2011 01:01 AM
விழுப்புரம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில்
ஜெ.,வை பாராட்டி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.விழுப்புரம் வடக்கு மாவட்ட
எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமையில் நகரில் பல பகுதிகளில்
அ.தி.மு.க., வினர் ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் வழங்கினர்.மாவட்ட
மருத்துவரணி செயலாளர் லட்சுமணன், நகர தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர்., மன்ற
சேகர், ஒன்றிய நிர்வாகிகள் கலுவு, மலையான், பார்த்தசாரதி, திருமலை,
ஜெயச்சந்திரன், அன்பழகன், முருகன், வெங்கடேசன், தேவநாதன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.துண்டு பிரசுரத்தில், இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு
தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த குற்றங்கள் குறித்து இலங்கை அரசு
தெளிவுபடுத்தும் வரை, அந்த நாட்டிற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்
என அமெரிக்கா லோக்சபாவில் வெளியுறவுக்குழு முடிவு செய்துள்ளது.சில
நாட்களுக்கு முன் தமிழகம் வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி
கிளிண்டனிடம் முதல்வர் ஜெ., பேசியதன் விளைவாக இந்த தீர்மானத்தை அமெரிக்க
அரசு நிறைவேற்றியுள்ளது.ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழக அரசு கொண்டு வந்த
தீர்மானம் மற்றும் தனது வாதத்திறமையால் அமெரிக்காவை தமிழர் நலன் சார்ந்த
நடவடிக்கை யில் ஈடுபட வைத்துள்ளார். இவ்வாறு அந்த துண்டு பிரசுரங் களில்
கூறப்பட்டுள்ளது.