உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி: 15 பேர் காயம்

அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி: 15 பேர் காயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே நின்றிருந்த பஸ்சின் மீது மற்றொரு பஸ் மோதியதில் டிரைவர் இறந்தார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்று கொண் டிருந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே, பஸ்சின் டயர் வெடித்ததால் சாலையோரமாக நிறுத்தி டயர் மாற்றி கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், ஆம்னி பஸ்சின் பின் பக்கமாக மோதியது. இதில் ஆம்னி பஸ் டிரைவர் திருச்சி குட்டம்பட்டு நாவலூர் பகுதியை சேர்ந்த தேவராஜ்,32 மற்றும் பயணிகள் 15 பேர் காயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். விபத்தில் காயமடைந்த இரு பஸ்களிலும் இருந்த 15 பயணிகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை