உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசு சார்பு செயலர்கள் கள ஆய்வு

மத்திய அரசு சார்பு செயலர்கள் கள ஆய்வு

விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டத்தில் 12 சார்பு செயலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்ளை களப்பணி மேற்கொள்ள மத்திய அரசின் சார்பு செயலர்கள் 12 பேர் முகாமிட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து துறை உயரதிகாரிகள் வாயிலாக எடுத்துரைத்து நேரடி ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் நேற்று காலை கலெக்டர் மணிமேகலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், திட்ட இயக்குனர் முத்து மீனாள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை