உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பொறுப்புக் குழு விருப்ப மனுக்கள் வழங்கல்

தி.மு.க., பொறுப்புக் குழு விருப்ப மனுக்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தி.மு. க., சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி சித்ரா மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை கழக தீர்மானக் குழு செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மாவட்ட அவைத் தலைவர் செஞ்சி மஸ்தான், முன் னாள் சேர்மன் ராதாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., உதயசூரியன் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர செயலாளர் கென்னடி, மாவட்ட இலக்கிய அணி செயலா ளர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., பச்சையப்பன் கலந்து கொண்டனர். மதியம் 2 மணி வரை 400 பேர் விண்ணப்பம் பெற்று சென்றனர். மாலை சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மாவட்ட பொறுப்பு குழுவினர் முகாமிட்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை