உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய நெடுஞ்சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள்

செஞ்சி ; செஞ்சி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம், படுகுழிகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். தேசிய நெடுஞ்சாலை எண் 66ல் அமைந்துள்ள செஞ்சி - திண்டிவனம் இடையிலான 26 கி.மீ., தூரத்திற்கான சாலை கடந்தாண்டு பெய்த மழையினால் பலத்த சேதமடைந்தது. இந்த சாலையை சில மாதங்களுக்கு முன்பு பேட்ச் ஒர்க் செய்து சரி செய்தனர். பேட்ச் ஒர்க்கினால் ஏற்பட்ட மேடு பள்ளம் காரணமாக இந்த வழியாக சென்ற வாகனங்கள் அதிர்வினால் பாதிக்கப்பட்டன. சாலையின் பல இடங்களில் ஜல்லியை பெயர்த்து எடுத்ததை போன்று பள் ளங்கள் உள்ளன. குண் டும், குழியுமாக மாறியுள்ள இந்த சாலையில் வாகனங்கள் வளைந்து, நெளிந்து செல்கின்றன. இரவில் பள்ளங்களை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தை தவிர்க்க பெரும் பாடுபடுகின்றனர். இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நகாய் பராமரிப்பில் உள்ள புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையின் ஒரு பகுதியான இந்த சாலையை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை