உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டி.எஸ்.எம்., கல்லூரியில் ஆசிரியர் தின பட்டிமன்றம்

டி.எஸ்.எம்., கல்லூரியில் ஆசிரியர் தின பட்டிமன்றம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவிற்கு குஷால் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் தாளாளர் மனோகர் குமார் சுராணா தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் சுராணா முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் சங்கர் வரவேற்றார். டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் திருவேங்கடாச்சாரி, தமிழ் விரிவுரையாளர் கோபால் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அண்ணா.கலியன் தொகுத்து வழங்கினார். முன்னதாக விரிவுரையாளர் பொன்சின்னையா தலைமையில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பட்டிமன்றம், கவிதை, நாடகம், நகைச்சுவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ரிவுரையா ளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர்.ஒளி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் அன்புநேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை