உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறுமைய போட்டிகளில்இ.எஸ்., பள்ளி சாதனை

குறுமைய போட்டிகளில்இ.எஸ்., பள்ளி சாதனை

விழுப்புரம்:பள்ளி அளவில் நடந்த குறுமைய விளையாட்டு போட்டிகளில் இ.எஸ்., பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வளவனூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் 52 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழ்நிலை, உயர்நிலை, மேல்நிலை மாணவர்கள் தடகள விளையாட்டு போட்டியில் 9 முதல் பரிசுகளையும், 2 மாணவர்கள் இரண்டாம் மற்றும் 4 மாணவர்கள் மூன்றாம் பரிசுகளையும், உயர் நிலைப் பிரிவில் எறிபந்தில் முதலிடத்தையும், மேல் நிலை பிரிவில் மாணவிகள் இறகு பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தையும் இ.எஸ்., பள்ளி மாணவர்கள் பிடித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் செல்வமணி, செயலர் பிரியாசெல்வமணி, முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வின்சென்ட் பாலு, பிஜூ சாபு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்