உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி கவுன்சில் கூட்டம்

கள்ளக்குறிச்சி கவுன்சில் கூட்டம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழுவின் அவசர கூட்டம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் வெங் கடாசலம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முரளி, பி.டி. ஓ.,க்கள் குருசாமி, முரளிதரன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அருண்ராஜா, துணை பி.டி. ஓ.,க்கள் நாகராஜன், கருணாநிதி, ஆண்டியப்பன், ஜோசப் ஆனந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு ஊர்களுக்கு சிமென்ட் சாலை அமைத்தல், சுடுகாட்டு பாதை மேம்படுத்துதல், சிறுபாலம் அமைத்தல், தடுப்பு சுவர் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ