உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவன்தற்கொலை முயற்சி

பள்ளி மாணவன்தற்கொலை முயற்சி

உளுந்தூர்பேட்டை:பள்ளி வளாகத்தில் மாணவர் விஷம் குடித்த மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்சில் கிண்டல் செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்ததால் பிளஸ் 1 மாணவர்களான கிளியூரை சேர்ந்த தங்கராஜ், சீனிவாசன், நடராஜன் மூவரையும் பள்ளி ஆசிரியர் கண்டித்துள்ளார்.இது குறித்து பள்ளி அறிவிப்பு பலகையில் பெயர் எழுதப்பட்டிருந்ததால் சக மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தங்கராஜ் நேற்று முன்தினம் மதியம் 3.45 மணிக்கு பூச்சி மருந்து குடித்து பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்தான்.உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி