உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டம் முழுவதும் எட்டு மையங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு

மாவட்டம் முழுவதும் எட்டு மையங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு நடந்தது.திறனாய்வு தேர்வில் பங்கேற்க மாவட்டத்தில் உள்ள 1860 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இதில் விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி மையத்தில் 276 பேரும், நகராட்சி ஆண்கள் பள்ளி மையத்தில் 211, உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் 165, கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியில் 256, திருக்கோவிலூர் அரசு ஆண்கள் பள்ளியில் 200, செஞ்சி அரசு மகளிர் பள்ளியில் 173, திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில் 294, திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் 238 பேரும் என 8 மையங்களில் 1813 மாணவ, மாணவிகள் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்றனர்.நேற்று காலை 10 மணிக்கு துவங்கி பகல் 12.30 மணி வரை நடந்த தேர்வில் அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. கம்ப்யூட்டர் கோடிங் ஷீட்டில் விடைகளை 'டிக்' செய்து மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.கள்ளக்குறிச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமியும், விழுப்புரத்தில் டி.இ.ஓ., பூபதியும், திண்டிவனத்தில் டி. இ.ஓ., சண்முகமும், திருக் கோவிலூரில் துணை ஆய் வாளர் ராமகிருஷ்ணனும், உளுந்தூர்பேட்டையில் துணை ஆய்வாளர் இருதயராஜ் உள்ளிட்டோர் தேர்வு மையத்தை மேற் பார்வை யிட்டனர்.கிராமப்புறத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இந்த திறனாய்வுத் தேர்வில் ஆண்டுதோறும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ