உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு தோட்டத்தில் பதுக்கிய3,600 மதுபாட்டில்கள் பறிமுதல்

கரும்பு தோட்டத்தில் பதுக்கிய3,600 மதுபாட்டில்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை:மதுபாட்டில்களை உளுந்தூர்பேட்டை அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் எலவனாசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், சிறப்பு எஸ்.ஐ., சுதாகர், தனி பிரிவு ஏட்டு தன்ராஜ் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். கூத்தனூர் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த தானம் காலனி சிவலிங்கம்,51, அவரது மகன் மணிகண்டன்,22 இருவரும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள் வடுகுபாளையத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 3,600 மதுபாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.தகவலறிந்த ஏ.டி.எஸ். பி., (குற்றப் பிரிவு) பெருமாள், டி.எஸ். பி., (கலால்) ஜெயராஜ் நேரில் பார்வையிட்டு, அதிரடி ரெய்டு நடத்திய போலீசாரை பாராட்டினர்.மதுபாட்டில்கள் கடத்திய சம்பவம் தொடர்பாக சிவலிங்கம், மணிகண்டன் மற்றும் எறையூரை சேர்ந்த அந்தோணிராஜ் ஆகியோரை எலவனாசூர்கோட்டை போலீõர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ