உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வியாபாரிகள் சங்க கூட்டம்

வியாபாரிகள் சங்க கூட்டம்

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்கராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சாதிக் வரவேற்றார்.கூட்டத்தில், சங்கராபுரம் பகுதியில் புதிய வழித் தடங்களில் பஸ்கள் இயக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர், தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முத்திரை பதிக்கும் சிறப்பு முகாமில் வியாபாரிகள் எடைகளுக்கு முத்திரையிட்டுக் கொள்வது என்றும், சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் குசேலன், சிவா, வைத்திலிங்கம், சர்புதீன், நெடுஞ்செழியன், தெய்வமணி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ