உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை அம்மாள் கல்லூரிகூடைப்பந்து போட்டியில் வெற்றி

தெய்வானை அம்மாள் கல்லூரிகூடைப்பந்து போட்டியில் வெற்றி

விழுப்புரம்:விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி கூடைப் பந்து போட்டியில் வெற்றி பெற்றது.திருவள்ளுவர் பல்கலை கழக கடலூர் மண்டல கல்லூரிகளுக்கிடையே மகளிர் கூடைப்பந்து போட்டி விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்தது. உடற் கல்வி இயக்குனர் தமிழரசி வரவேற்றார். முதல் சுற்று போட்டியில் கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி அணியை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி அணி வென்றது. இரண்டாம் சுற்றில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை தெய்வானை அம்மாள் கல்லூரி அணி வென்றது.இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணிக்கு கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்தார். உடற்கல்வி இயக்குனர் லில்லி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை