| ADDED : செப் 21, 2011 09:49 PM
விழுப்புரம்:வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின்
கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் மணிமேகலை தலைமை
தாங்கினார். மாவட்ட கல்வி அலு வலர் குப்புசாமி வரவேற்றார். ஆனந்தன்
எம்.பி., அரசு தலைமை கொறடா மோகன், எம்.எல். ஏ.,க்கள் அழகுவேல் பாபு,
நாகராஜ், ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு
மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய் ஊக்கத்தொகையும், பிளஸ் 2
மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையையும் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் சண்முகம் வழங்கினார். விழாவில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:முதல்வர் ஜெ., தலைமையிலான ஆட்சியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு
எண்ணற்ற திட் டங்களை தீட்டியுள்ளார். பெற்றோர்களின் உணர்வுகளையும்,
மாணவர்களின் நலனையும் உணர்ந்த முதல்வர் ஜெ., மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை
வழங்கி, அவர்கள் அறிவை வளர்த்து கொள்ள லேப் டாப்பையும் இலவசமாக
வழங்கியுள்ளார்.மாணவர்களுக்கு தாய் ஸ்தானத்தில் இருந்து முதல் வர் ஜெ.,
நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்த திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும்.இவ்வாறு அமைச்சர் சண்முகம்
பேசினார்.விழாவில் ஆர்.டி.ஓ., பிரியா, தாசில்தார் ஜவகர், பி.ஆர்.ஓ.,
லிங்கம், அ.தி. மு.க., நகர செயலாளர் பாஸ்கரன், கோலியனூர் ஒன்றிய செயலாளர்
சுரேஷ் பாபு, வளவனூர் நகர செய லாளர் காசிநாதன் பங் கேற்றனர். தலைமை
ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.