| ADDED : செப் 21, 2011 09:53 PM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உழவர் பாதுகாப்பு
திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.செஞ்சி தாலுகா பள்ளியம்பட்டு
கிராமத்தில் நடந்த விழாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்
ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சையத் இக்பால் முன்னிலை
வகித்தார். வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார் வரவேற்றார். தாசில்தார் தலைமலை
60 பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.சங்கராபுரம் தாலுகா
அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., உமாபதி தலைமை
தாங்கினார். தாசில்தார் கோகுலபத்மநாபன் முன்னிலை வகித்தார். சமூக
பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மூர்த்தி வரவேற்றார். அரசு கொறடா மோகன்
கலந்து கொண்டு 75 நபர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.தியாகதுருகம்
அடுத்த வி.புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் எம். எல்.ஏ., அழகுவேல்பாபு
பயனாளிகளுக்கு அடை யாள அட்டையை வழங்கினார். சமூக நல பாதுகாப்பு தாசில்தார்
மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் சற்குணம் உடனிருந்தனர்.திருக்கோவிலூர்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தாசில்தார் பார்வதி முன்னிலை
வகித்தார். சப்-கலெக்டர் ஆனந்த், பயனாளிகளுக்கு அடையாள அடையாள அட்டைகளை
வழங்கினார்.தனி தாசில்தார் பொன்னுசாமி, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர்
உமா தேவி, துணை தாசில்தார்கள் தமிழ்மணி, சிவக்குமார் உடனிருந்தனர்.